நடிகை நஸ்ரியாவுக்கு என்ன ஆச்சு?

17 சித்திரை 2025 வியாழன் 12:17 | பார்வைகள் : 367
நடிகை நஸ்ரியா திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திரையுலகினர், ரசிகர்கள் மற்றும் நலவிரும்பிகளிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் ஒன்றை பதிவு செய்துள்ளார். இந்த பதிவில் அவருக்கு என்ன பிரச்சனை என்று சொல்லாவிட்டாலும், அவர் மனநல பிரச்சனையில் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. நஸ்ரியா எழுதிய கடிதம் இதோ:
நீங்கள் எல்லாரும் நலமாக இருக்கிறீங்கன்னு நம்புறேன். நான் சில நாட்களாக பொது மேடையில் வராமல் இருந்தது பற்றி சில விஷயங்களை பகிர விரும்புறேன். கடந்த மாதங்களில் மனதளவிலான குழப்பங்கள் மற்றும் வாழ்க்கை சம்பந்தமான சவால்கள் எனக்குள் ஒரு போராட்டமாக இருந்தது.
30-வது பிறந்த நாள், புத்தாண்டு, சூட்சம தர்ஷினி வெற்றிவிழா என பல முக்கியமான தருணங்களை நான் தவிர்க்க நேர்ந்தது. நெருக்கமான தோழிகளுக்கும் நண்பர்களுக்கும் நான் நேரில் வராமல் இருந்ததற்கும், அழைப்புகளுக்கு பதில் சொல்லாம இருந்ததற்கும், செய்திகளுக்கு பதில் தராமல் இருந்ததற்கும் மனமார்ந்த மன்னிப்புக் கேட்கிறேன். எவருக்கும் சிரமம் ஏற்பட்டிருந்தால், அதற்கு வருந்துகிறேன்.
அந்த நாட்களில் எனக்கு முழு முடக்கம் போல இருந்தது. வேலையிலிருந்து என் மேல் சார்ந்திருந்த அனைத்து குழுவினரிடமும் என்னால் ஏற்பட்ட தாமதங்களுக்காகவும் மனமார்ந்த மன்னிப்புக் கேட்கிறேன்.
இந்நிலையில், ‘சிறந்த நடிகை’ விருதை கேரள திரைப்பட விமர்சகர்களிடம் இருந்து பெற்றிருப்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்த அங்கீகாரம் எனக்கு பெரும் உற்சாகத்தையும் நன்றியையும் அளிக்கிறது. சக வெற்றியாளர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்.
இந்த கடினமான பாதையில் நான் தினம் தினம் நிமிர்ந்து வருகிறேன். உங்கள் ஆதரவும், சகிப்பு மனப்பான்மையும் எனக்கு வலிமையாக இருந்தன. இன்னும் கொஞ்ச நாட்கள் தேவைப்படலாம் முழுமையாக திரும்ப வர, ஆனால் இந்த பயணம் மீள்வதற்கான வழியில் தான் போய்க் கொண்டிருக்கிறேன்.
எல்லாரையும் மனதார நேசிக்கிறேன். சீக்கிரம் சந்திப்போம். உங்கள் எல்லையில்லா அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றிகள். இவ்வாறு நஸ்ரியா தனது இன்ஸ்டாவில் தெரிவித்துள்ளார். இதையடுத்து நஸ்ரியா விரைவில் மீண்டு வர வேண்டும் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர்.