பனிப்பொழிவு!!

16 சித்திரை 2025 புதன் 18:07 | பார்வைகள் : 1735
இன்று ஏப்ரல் 16, புதன்கிழமை நாட்டின் பல பகுதிகளில் சீரற்ற காலநிலை நிலவும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பனிப்பொழிவு, பனிச்சரிவு, மழை மற்றும் வெள்ளம் போன்ற அனர்த்தங்கள் ஏற்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
Corse தீவில் உள்ள இரண்டு மாவட்டங்களுக்கும் மழை மற்றும் வெள்ளம் காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Alps மாவட்டத்துக்கு கடும் பனிப்பொழிவு காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, Savoie மாவட்டத்துக்கு பனிச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பனிச்சறுக்கு விளையாட்டில் ஈடுபட அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.