Paristamil Navigation Paristamil advert login

பாக்கிஸ்தானில் அதிகரித்து வரும் வெப்பநிலை - நிபுணர்கள் கருத்து

பாக்கிஸ்தானில் அதிகரித்து வரும் வெப்பநிலை - நிபுணர்கள் கருத்து

16 சித்திரை 2025 புதன் 14:21 | பார்வைகள் : 472


பாக்கிஸ்தானிலும் இந்தியாவிலும் வாழும் கோடிக்கணக்கான மக்களிற்கு கோடை வெப்ப அலைகளின் ஆரம்ப வருகை ஒரு பயங்கரமான யதார்த்தமாக மாறியுள்ளது.

இந்த வெப்பஅலைகள் மனிதனின் உயிர்வாழும்  திறனை சோதிக்கின்றன,எரிசக்தி விநியோகம்,பயிர்ச்செய்கை மற்றும் வாழ்வாதாரங்களிற்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்துகின்றன.

மே ஜூன் மாதங்களில் இரண்டு நாடுகளும் வெப்பஅலைகளை அனுபவிப்பது வழமை ஆனால் இந்த ஆண்டு வெப்பஅலை காலம் வழக்கத்தை விட முன்னதாகவே ஆரம்பமாகிவிட்டது.மேலும் இது நீண்டகாலம் நீடிக்கும் என்ற அச்சமும் வெளியாகியுள்ளது.

இந்த வாரம் இரண்டு நாடுகளிலும் வெப்பம் மிகவும் ஆபத்தான அளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏப்பிரல் 14 முதல் 18 வரை பாக்கிஸ்தானின் சில பகுதிகளில் இயல்பை விட 8டிகிரி செல்சியஸ் அதிகமான வெப்பம் பதிவாகும் என அந்தநாட்டின் வானிலைஆய்வ மையம் தெரிவித்துள்ளது.

பாக்கிஸ்தானின் தென்மேற்கில் உள்ள பலுசிஸ்தானில் அதிகபட்ச வெப்பநிலை 49 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என எச்சரிக்கை வெளியாகியுள்ளது.

இது அமெரிக்காவின் மிகவும் வெப்பமான மற்றும் வரண்ட இடமான மரணபள்ளத்தாக்கில் வாழ்வதற்கு ஒப்பானது.அங்கு கோடை காலத்தில் பகல்நேர வெப்பநிலை கிட்டத்தட்ட 49 டிகிரி செல்சியசாக காணப்படும்.

பலூச்சிஸ்தானின் தேரா முராத் ஜமாலி நகரில் வசிக்கும் அயூப்கோசா வெப்ப அலை பலரை எதிர்பாரத அளவிற்கு பாதித்துள்ளது என தெரிவித்துள்ளதுடன்,மக்களிற்கு கடும் சவால்களை உருவாக்கியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தொடர்ச்சியாக மின்சாரம் துண்டிக்கப்படுவது ஒரு முக்கிய பிரச்சினையான உள்ளது என தெரிவித்த அவர் சில நாட்களில் மின்தடை 16 மணித்தியாலங்கள் வரை நீடிப்பதாக தெரிவித்தார்.

இது வெப்பத்தின் தாக்கத்தை அதிகரித்துள்ளது,மக்களால் வெப்பத்தினை தாங்கிக்கொள்ள முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது என அவர் தெரிவித்தார்.

பாக்கிஸ்தானின் அண்டை நாடான இந்தியாவும் வழக்கத்தை விட முன்னதாகவே கடும் வெப்பத்தை அனுபவிக்கின்றது.

ஏப்பிரல் மாதத்தில் இயல்பை விட அதிகமான வெப்ப அலை நாட்களிற்கு தயாராகயிருக்குமாறு இந்தியாவின் சில பகுதிகளிற்கு வானிலை அவதானநிலையம் எச்சரித்துள்ளது.

16 மில்லியன் மக்கள் சனத்தொகையை கொண்ட புதுடில்லியில் ஏற்கனவே வெப்பநிலை 4049 டிகிரி செல்சியசினை தொட்டுவிட்டது.இந்த மாதத்தில் மூன்று தடவை இந்த நிலை காணப்பட்டது என தெரிவித்துள்ள காலநிலை அவதான நிலையம் இது பருவகால சராசரியை விட 5 டிகிரி அதிகம் என தெரிவித்துள்ளது.

அதிகரித்து வரும் வெப்பநிலை மனிதர்களின் உயிர்வாழும் திறனை  சோதிப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த தசாப்தங்களில் இந்தியாவிலும் பாக்கிஸ்தானிலும் கடும் வெப்பம் பல்லாயிரக்கணக்கான உயிர்களை கொன்றுள்ளது.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்