வெள்ளிக்கிழமை முதல் திங்கட்கிழமை வரை கடும் சாலை நெரிசல்!

16 சித்திரை 2025 புதன் 14:17 | பார்வைகள் : 1852
ஈஸ்டர் வார இறுதியில் பிரான்ஸ் முழுவதும் சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் எதிர்பார்க்கப்படுகிறது. Zone A-இல் விடுமுறை துவங்கும் போதும் Zone B-இல் விடுமுறை முடிவடைகிறது. இதனால் மூன்று நாள் விடுமுறையில் மக்கள் பெரிதளவில் பயணிக்கவுள்ளதாக Bison Futé எச்சரித்துள்ளது.
வெள்ளிக்கிழமை மிகவும் பரபரப்பாக இருக்கும் என கூறப்படுகின்றது. குறிப்பாக A1, A25, A13, A11, A63, மற்றும் A7 போன்ற முக்கியச் சாலைகளிலும் இத்தாலி எல்லை வழியாகவும் பெரும் நெரிசல் ஏற்படலாம்.
சனிக்கிழமையும் மற்றும் திங்கட்கிழமையும் பயணத்திற்கு கடினமானதாக இருக்கும். சனிக்கிழமை வெளியேறும் பயணிகளுக்கும் திங்கட்கிழமை திரும்பும் பயணிகளுக்கும் போக்குவரத்து மந்தமாக இருக்கும்.
சுமூகமான பயணத்தை விரும்புபவர்கள் ஞாயிற்றுக்கிழமை காரில் பயணிக்கலாம். அல்லது நெரிசலை தவிர்க்க பொது போக்குவரத்து பரிந்துரைக்கப்படுகிறது.