Paristamil Navigation Paristamil advert login

மீண்டும் ரஜினியுடன் இணையும் கார்த்திக் சுப்பராஜ்?

மீண்டும் ரஜினியுடன் இணையும் கார்த்திக் சுப்பராஜ்?

16 சித்திரை 2025 புதன் 11:44 | பார்வைகள் : 5330


நடிகர் ரஜினிகாந்த், தற்போது 'கூலி' படப்பிடிப்பை முடித்துவிட்டு 'ஜெயிலர் 2' திரைப்படத்தில் பிசியாக நடித்து கொண்டு வருகிறார். கூலி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் 14 ஆண்டு திரைக்கு வருமென்று அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த நிலையில் அவரின் அடுத்த பட இயக்குனர் யார் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சமீபத்தில் 'ரெட்ரோ' பட புரமோஷன் பணிகளில் பிசியாக இருக்கும் இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் ஒரு தொலைக்காட்சி ஒன்றில் அளித்த பேட்டியில், 'ரஜினிகாந்த்க்கு ஒரு கதை சொன்னதாகவும் அதற்கு ரஜினி பச்சை கோடி காட்டியதாகவும்' தெரிவித்துள்ளார். இதனால் ரஜினிகாந்த் தரப்பிலிருந்து விரைவில் பதில் வருமென்று எதிர்பார்த்து காத்து கொண்டிருப்பதாக கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார். இந்த திரைப்படம் 'பேட்ட 2'வாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்