CAF : சிக்கல்!! - உண்மைத்தன்மைகளை அறிய பெற்றோர்கள் தீவிர கண்காணிப்பில்!!

16 சித்திரை 2025 புதன் 07:00 | பார்வைகள் : 2223
சமூக நலக் கொடுப்பனவுகள் பெறுபவர்களில் ஒரு பிரிவினருக்கு மட்டும் சிக்கல் எழுந்துள்ளது. ஆண்டுதோறும் மேற்கொள்ளப்படும் சோதனைகளில் ஒரு பிரிவினர் மட்டும் அதிகளவில் சோதனைக்குட்படுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குடும்பத்தலைவர்களில் பெண் மட்டும் தலைமையாகக் கொண்டவர்கள் (mères célibataires) பெறும் கொடுப்பனவுகளில் அதிகளவில் மோசடிகள் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. பலர் கணவரை விவாகரத்து செய்துவிட்டு மறைமுகமாக கணவரும் வாழ்வதாக தெரிவிக்கப்படுகிறது. சிலர் கணவரை விவாகரத்துச் செய்துவிட்டு கொடுப்பனவுகள் பெற்றுக்கொண்டு காதலனுடன் வாழ்வதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது அவர்கள் பல வழிகளில் கண்காணிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகிறது. அவங்களுடைய வங்கிப் பரிவர்த்தனைகள், அவர்களுடைய 'விலைப்பட்டியல்' அவர்கள் பயன்படுத்தும் வாகனங்கள், அவர்களது வேலை நேரம் என சகல வழிகளிலும் கண்காணிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஏனைய பிரிவினர் 16% சதவீதமளவு சோதனையிடப்படும் போது, மேற்குறித்த பிரிவினர் மாத்திரம் 36% சதவீதம் சோதனையிடப்பட உள்ளதாக Le Monde ஊடகம் தெரிவிக்கிறது.