ஈராக்கில் மணல் புயல் - 4 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு!

15 சித்திரை 2025 செவ்வாய் 16:02 | பார்வைகள் : 921
ஈராக்கின் பல நகரங்களில் வீசிய மணல் புயல் காரணமாக சுமார் நாலாயிரத்திற்கும் மேற்பட்டோர் மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
ஈராக் முழுவதும் வீசிய மணல் புயலையடுத்து ஏற்பட்ட மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட பலர் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதனால் பாஸ்ரா மற்றும் நஜாப் ஆகிய விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளன.