Paristamil Navigation Paristamil advert login

அமெரிக்காவில் 17 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

அமெரிக்காவில் 17 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

15 பங்குனி 2025 சனி 07:23 | பார்வைகள் : 2852


அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் 17 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் இரண்டு குழந்தைகள் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மேலும் காயமடைந்த 11 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக கூறப்படுகிறது.

ஹோவர்ட் லேன் மற்றும் பார்மர் லேன் இடையே உள்ள வீதியில் 18 சக்கர டிரக் வாகனம் ஒன்று மகிழுந்து ஒன்றை மோதி தள்ளியதில் அவை ஒன்றோடொன்று மோதிக்கொண்டதில் விபத்து நிகழ்ந்தது.

விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் டிரக் வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வாகனத்தின் சாரதி மதுபோதையில் வாகனத்தை செலுத்தியமையால் இவ்விபத்து நிகழ்ந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அந்நாட்டு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்