Paristamil Navigation Paristamil advert login

குடும்ப வன்முறை.. கத்திக்குத்தில் பெண் பலி!!

குடும்ப வன்முறை.. கத்திக்குத்தில் பெண் பலி!!

14 பங்குனி 2025 வெள்ளி 13:28 | பார்வைகள் : 2915


கணவன் மனைவிக்கிடையே இடம்பெற்ற வாய்த்தர்க்கம், கத்திக்குத்தில் சென்று முடிந்துள்ளது. 42 வயதுடைய பெண் ஒருவர் பலியாகியுள்ளார்.

Maurepas (Yvelines) நகரில் இச்சம்பவம் நேற்று மார்ச் 13,  வியாழக்கிழமை இடம்பெற்றுள்ளது. 42 வயதுடைய பெண் ஒருவர் அவரது கணவரால் தாக்கப்பட்டுள்ளார். சமையலுக்கு பயன்படுத்தும் கத்தி ஒன்றினை பயன்படுத்தி குத்தப்பட்டதில் அவர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளார்.  

தாக்குதல் இடம்பெற்றதற்குரிய காரணம் குறித்து அறிய முடியவில்லை. அப்பெண்ணின் 10 வயதுடைய மகள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதை அடுத்து கொல்லப்பட்ட பெண்ணின் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்