குளியலறைக்குள் சிக்கிக்கொண்ட பெண்.. ஆறு நாட்களின் பின் மீட்பு!!

14 பங்குனி 2025 வெள்ளி 07:00 | பார்வைகள் : 10603
ஆறு நாட்களாக குளியலறைக்குள் சிக்கிக்கொண்ட பெண் ஒருவர் ஆறு நாட்களின் பின்னர் தீயணைப்பு படையினரால் மீட்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் பிரான்சின் தெற்கு நகரமான Martigues (Bouches-du-Rhône) இல் இடம்பெற்றுள்ளது. அங்கு வசிக்கும் 70 வயதுடைய பெண் ஒருவர் தொடர்பில் தகவல் எதுவும் அறிய முடியவில்லை என கவலையுற்ற அவரின் மகன், வீட்டின் அருகில் வசிக்கும் ஒருவரை தொடர்புகொண்டு தாயார் குறித்து விசாரித்துள்ளார்.
வீட்டின் கதவினை திறக்க முடியவில்லை என பதில் வந்ததை அடுத்து, தீயணைப்பு படையினரை அழைத்துள்ளனர். அவர்கள் வீட்டின் கதவை உடைத்துக்கொண்டு உள்ளே சென்று தேடிய போது, குளியலறையில் குறித்த பெண் இருப்பதை கண்டறிந்தனர்.
ஆறு நாட்களுக்கு முன்பாக அவர் குளிப்பதற்காக சென்றிருந்த போது, குளியல் தொட்டியில் வழுக்கி விழுந்துள்ளார் எனவும், அதை அடுத்து அவரால் எழுந்து வெளியே வரமுடியவில்லை எனவும், அங்கே இருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. பசிக்கும் போதெல்லாம் தண்ணீரை மட்டுமே பருகி உயிர்வாழ்ந்துள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக அவர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு இடுப்பு எலும்பு உடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025