Paristamil Navigation Paristamil advert login

தையிட்டி விகாரை - முடிவெடுக்க தயாராகும் அரசாங்கம்!

தையிட்டி விகாரை - முடிவெடுக்க தயாராகும் அரசாங்கம்!

12 பங்குனி 2025 புதன் 13:11 | பார்வைகள் : 3989


இனங்களுக்கிடையில் சுமுகத்தன்மையை உறுதிப்படுத்த அரசாங்கம் உரிய தலையீட்டை மேற்கொள்ளும் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் வலி வடக்கு பிரதேசத்தில் கட்டப்பட்டுள்ள தையிட்டி விகாரை தொடர்பில் குழுவில் வினவப்பட்டபோதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

குறித்த இடத்திற்கு விஜயம் செய்து அதனைப் பார்வையிடுவதாகவும், இதுவிடயத்தில் நியாயமான முறையில் தலையிட முடியும் என நம்புவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

பத்தாவது பாராளுமன்றத்தின் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் முதலாவது கூட்டம் கடந்த சனிக்கிழமை (08) அவருடைய தலைமையில் கூடியபோதே அமைச்சர் ஹினிதும சுனில் செனவி இவ்வாறு தெரிவித்தார்.

இதில் குறித்த அமைச்சின் பிரதியமைச்சர் கமகெதர திசாநாயக்கவும் கலந்துகொண்டார்.

இந்தக் குழுக் கூட்டத்தில் அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்