பரிசுக்கு வருகிறது இளையராஜா சிம்பொனி! - திகதியை அறிவித்தார்!!

10 பங்குனி 2025 திங்கள் 08:09 | பார்வைகள் : 6111
இசைஞானி இளையராஜாவின் சிம்பொனி இசைப்பிரவாகம் விரைவில் பிரான்ஸ் தலைநகர் பரிசில் இடம்பெற உள்ளது. அதன் திகதியை இளையராஜா அறிவித்துள்ளார்.
”Valiant” என பெயரிடப்பட்ட அவரது சிம்பொனி இசை நிகழ்ச்சி மார்ச் 8 ஆம் திகதி இலண்டனில் இடம்பெற்றது. அதனை முடித்துக்கு இன்று திங்கட்கிழமை அதிகாலை இளையராஜா சென்னை திரும்பினார். அங்கு வைத்து ஊடகவியலாளர்களைச் சந்தித்த இளையராஜா, இந்த சிம்பொனி நிகழ்ச்சி, 13 நாடுகளில் இடம்பெற உள்ளது என தெரிவித்தார்.
“இந்த சிம்பொனி இசையை ஒலிப்பதிவு செய்தோ, வீடியோக்களாகவோ கேட்கக்கூடாது. அதனை அந்த அரங்கில் இருந்து நேரடியாக கேட்டு மகிழவேண்டும். அதன் உணர்வுகள் நேரடியாக கடத்தப்படவேண்டும்” என தெரிவித்த அவர், பிரான்ஸ் தலைநகர் பரிசில் எதிர்வரும்
செப்டம்பர் 6 ஆம் திகதி இடம்பெறும் எனவும் தெரிவித்தார்.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1