Aubervilliers : துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் படுகாயம்!!

9 பங்குனி 2025 ஞாயிறு 13:19 | பார்வைகள் : 4772
Aubervilliers நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் நபர் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த ஆயுததாரி ஒருவரே துப்பாக்கிச்சூட்டினை மேற்கொண்டுள்ளார்.
மார்ச் 7, வெள்ளிக்கிழமை நண்பகல் இத்துப்பாக்கிச்சூடு இடம்பெற்றுள்ளது. rue Quentin வீதியில் காத்திருந்த ஒருவர் மீது மோட்டார் சைக்கிளில் வந்த ஆயுததாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் குறித்த நபர் படுகாயமடைதுள்ளார். 33 வயதுடைய குறித்த நபர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவர் மீது மூன்று குண்டுகள் பாய்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலதிக விசாரணைகளில், மோட்டார் சைக்கிளில் இரு ஆயுததாரிகள் இருந்ததாகவும், பின்னால் இந்த நபரே துப்பாக்கியை முழக்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.