பரிசில் பெண் உரிமைகளுக்கான ஆர்ப்பாட்டம்... 120,000 பேர் பங்கேற்பு!!
.jpg)
9 பங்குனி 2025 ஞாயிறு 07:00 | பார்வைகள் : 7031
நேற்று மார்ச் 8, உலக பெண்கள் தினம் கொண்டாடப்பட்ட நிலையில், பரிசில் பெண் உரிமைகளுக்கான ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. இதில் 120,000 பேர் பங்கேற்றதாக ஏற்பாட்டளர்கள் தெரிவித்தனர்.
நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் மொத்தமாக 150 ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இதில் பல்வேறு பெண்ணிய அமைப்புகள் CGT, CFDT, CFE-CGC, FSU, Solidaires, Unsa போன்ற தொழிற்சங்கங்கள் பங்கேற்றன.
பரிசில் Place de la République பகுதியில் ஆர்ப்பாட்டக்கார்கள் ஒன்று கூடிய பெண்களுக்கு எதிரான அநீதி, குடும்ப வன்முறை, பாலியல் சுறண்டல்கள் என பெண்களுக்கு எதிராக இடம்பெறும் பல விடயங்கள் தொடர்பில் விழிப்புணர்வு பிரச்சாரம் வைத்தனர்.
பரிசில் 120,000 பேரும், நாடு முழுவதும் 250,000 பேரும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1