■ மருத்துவ விடுப்பு.. ஊதியம் குறைகிறது!!

8 பங்குனி 2025 சனி 17:00 | பார்வைகள் : 5088
மருத்துவ விடுப்பின் போது வழங்கப்படும் ஊதியம் குறைக்கப்பட உள்ளதாக தொழிலாளர் அமைச்சகம் அறிவித்துள்ளது.
2025 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் பெருமளவு நிதியை சேகரிக்கும் முடிவை அரசு எட்டியுள்ளதை அடுத்து, பல்வேறு நலத்திட்டங்களில் அரசு கை வைத்துள்ளது. அதன் ஒரு அங்கமாக மருத்துவ விடுப்பு (Arrêt maladie) இன் போது வழங்கப்படும் ஊதியத்தை குறைக்க உள்ளது.
தற்போதைய சூழலில் மருத்துவ விடுப்பு எடுக்கப்பட்டால், நாள் சம்பளம் ஒன்றின் 50% சதவீத ஊதியம் வழங்கப்படும். இது அடிப்படைச் சம்பளத்தினை விட 1.8 மடங்கு அதிகமாகும்.
இதனை 1.4 மடங்காக குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதனால் €400 மில்லியன் யூரோக்களை சேமிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த சட்டமானது 2025, ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.