ஒவ்வொரு நாளும் ’மார்ச் 8’ - பெண்கள் தின வாழ்த்துக்கள் பகிர்ந்த ஜனாதிபதி!!

8 பங்குனி 2025 சனி 13:08 | பார்வைகள் : 4619
இன்று மார்ச் 8, சர்வதேச பெண்கள் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தனது வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
"பெண்களின் கண்ணியமும் சுதந்திரமும் பிரிக்க முடியாதவை மற்றும் அவர்களது உலகளாவிய உரிமைகளும் பிரிக்க முடியாதது!” என குறிப்பிட்ட ஜனாதிபதி மக்ரோன், ”எனது இந்த ஐந்தாண்டு பதவிக்காலத்தில் சமத்துவத்தை ஒரு முக்கிய விடயமாக கொண்டுள்ளேன். மேலு, பிரான்ஸ் இந்த கோரிக்கையை சர்வதேச அரங்கில் வலுவாக ஊக்குவித்து வருகிறது!” எனவும் மக்ரோன் குறிப்பிட்டார்.
”சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படும் இந்த நாளை விட்டு, ஒவ்வொரு நாளும் மார்ச் 8 ஆக இருக்க வேண்டும்” எனவும் மக்ரோன் குறிப்பிட்டார்.