Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

பாடகி கல்பனா தற்கொலைக்கு முயன்றாரா?

பாடகி கல்பனா தற்கொலைக்கு முயன்றாரா?

5 பங்குனி 2025 புதன் 14:01 | பார்வைகள் : 4243


பிரபல பின்னணி பாடகி கல்பனா தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானது. செவ்வாய்க்கிழமை அன்று அவர் வீட்டில் மயங்கிய நிலையில் இருந்ததை கண்ட போலீசார், அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவருக்கு வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் கல்பனா தற்கொலைக்கு முயன்றதாக அனைவரும் நினைத்தனர். தூக்க மாத்திரைகள் சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றதாக போலீசார் முதற்கட்டமாக தெரிவித்தனர்.

சென்னையில் இருந்த அவரது கணவர் பிரசாத்தையும் வரவழைத்து விசாரித்தனர். பாடகி கல்பனா தற்கொலை செய்து கொள்ளவில்லை, அதிகப்படியான மாத்திரைகளே காரணம் என கல்பனா மகள் தயா பிரசாத் கூறினார். அவர் மருத்துவமனையில் தனது தாயை அருகில் இருந்து கவனித்துக்கொள்கிறார். அப்போது அவர் ஊடகங்களிடம் பேசினார். நடந்தது என்ன என்பதை வெளிப்படுத்தினார். கல்பனா தற்கொலைக்கு முயலவில்லை என்று அவர் திட்டவட்டமாக கூறினார்.

அவர் தூக்கமின்மை நோயால் பாதிக்கப்பட்டிருப்பதால், மருத்துவர்களின் ஆலோசனைப்படி சில மாத்திரைகளை எடுத்துக்கொள்கிறார். ஆனால் அவற்றின் அளவு அதிகரித்ததால், அதிகப்படியான மருந்துகள் காரணமாக அவரது தாய் மயக்கமடைந்ததாக கூறினார்.

கல்பனா மகள் தயா பிரசாத் தங்கள் குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்று அவர் கூறினார். நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவித்தார். அம்மா உடல்நிலை குறித்து தவறான செய்திகளை பரப்ப வேண்டாம் என்றும், அவரது உடல்நிலை சீராக உள்ளது என்றும் கூறினார். விரைவில் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று கல்பனா மகள் தயா பிரசாத் தெரிவித்தார். மொத்தத்தில் தங்கள் குடும்பத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், அதிகப்படியான மாத்திரைகள் காரணமாகவே இது நடந்தது என்றும் மகள் தெரிவித்தார். இதனால் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.

கல்பனாவின் உடல்நிலை குறித்து மருத்துவர்கள் கருத்து தெரிவித்தனர். தற்போது கல்பனாவின் உடல்நிலை சீராக உள்ளது என்றும், மயக்க நிலையில் மருத்துவமனைக்கு வந்ததால் வென்டிலேட்டர் மூலம் சிகிச்சை அளித்தோம் என்றும் தெரிவித்தனர். இப்போது சிகிச்சைக்கு ஒத்துழைக்கிறார் என்று கூறினர். இன்னும் இரண்டு மூன்று நாட்களில் கல்பனா டிஸ்சார்ஜ் செய்யப்பட வாய்ப்புள்ளது என்றும், கவலைப்பட தேவையில்லை என்றும் தெரிவித்தனர். மருத்துவமனையில் கல்பனா நகரும் வீடியோ ஒன்று வெளியானது. இதில் அவரது உடல்நிலை சீராக இருப்பது போல் தெரிகிறது. 

வர்த்தக‌ விளம்பரங்கள்