Paristamil Navigation Paristamil advert login

காஸா பகுதி அருகே பயணிக்கும் ஜனாதிபதி மக்ரோன்!!

காஸா பகுதி அருகே பயணிக்கும் ஜனாதிபதி மக்ரோன்!!

4 சித்திரை 2025 வெள்ளி 10:06 | பார்வைகள் : 2616


ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் அடுத்தவாரம் எகிப்த்துக்கு பயணமாக உள்ளார். இந்த பயணத்தின் போது காஸா பகுதிக்கு அருகே உள்ள நகரம் ஒன்றுக்கு அவர் செல்ல உள்ளார்.

ஏப்ரல் 6, ஞாயிற்றுக்கிழமை அவர் எகிப்த்துக்கு பயணிக்க உள்ளார். அதன் போது காஸா பகுதிக்கு 50 கி.மீ அருகில் இருக்கும் al-Arish எனும் சிறு நகருக்குச் செல்ல உள்ளார். காஸாவில் நிரந்தர போர்நிறுத்தம் ஒன்றை விரும்பும் ஜனாதிபதி மக்ரோன், அந்நகரில் இருக்கும் மனிதாபிமான மற்றும் பாதுகாப்பு இயக்கங்களைச் சேர்ந்தவர்களைச் சந்திக்க உள்ளார்.

அங்கு கடமையாற்றி வரும் பிரெஞ்சு தன்னார்வ தொண்டு நிறுவன ஊழியர்கள், ஐரோப்பாவைச் சேந்த தன்னார்வ ஊழியர்கள் என பலரைச் சந்திக்க உள்ளார். 

ஜனாதிபதி மக்ரோனுடன், எகிப்திய ஜனாதிபதி Abdel Fattah al-Sisi  உடன் பயணிக்க உள்ளதாக அறிய முடிகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்