”எங்களிடம் சிறப்பான சீரீஸ் உள்ளன!” - Adolescence தொடருக்கு மறுப்பு தெரிவித்த Élisabeth Borne!!

3 சித்திரை 2025 வியாழன் 17:30 | பார்வைகள் : 3653
பிரித்தானியாவில் உள்ள நடுத்தர வகுப்பு மாணவர்களுக்கு Adolescence எனும் சீரிஸ் திரையிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில், பிரான்சில் கல்வி அமைச்சர் Élisabeth Borne அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.
Adolescence எனும் சிறிய - நான்கு மணிநேரம் ஓடக்கூடிய தொடர் தற்போது உலகம் முழுவதும் பெரிதும் பாராட்டப்பட்டு வருகிறது. பதின்ம வயதினர் எவ்வாறு மூளைச்சலைவைக்கு உள்ளாகி வாழ்க்கையில் திசைமாறுகிறார்கள் எனும் கதையைக் கொண்டது இந்த சீரிஸ். அதனை பிரித்தானியாவில் உள்ள பாடசாலைகளில் காட்சிப்படுத்த உள்ளனர்.
இதுபோன்று பிரான்சில் காட்சிப்படுத்தப்படுமா எனும் கேள்விக்கு கல்வி அமைச்சர் Élisabeth Borne பதிலளித்துள்ளார். “சமூக ஊடகங்கள், வன்முறை மற்றும் பாலியல் பாகுபாட்டின் அபாயங்கள் குறித்து அனைத்து மாணவர்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது ஒரு நல்ல யோசனை; இந்தத் தொடர் அதைத்தான் காட்டுகிறது” என அவர் தெரிவித்தார்.
மேலும், "எங்களிடம் நிறைய கல்வி வளங்கள் உள்ளன. மேலும் இந்த விடயத்தில் ஏற்கனவே வேறு நல்ல பிரெஞ்சு தொடர்கள் உள்ளன.” எனவும் தெரிவித்தார். ஆனால் எந்த உதாரண்ங்களையும் அவர் மேற்கோள் காட்டவில்லை.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025