Paristamil Navigation Paristamil advert login

மீனவர் ஓட்டுக்காக கச்சத்தீவு தீர்மானம்: சீமான்

மீனவர் ஓட்டுக்காக கச்சத்தீவு தீர்மானம்: சீமான்

3 சித்திரை 2025 வியாழன் 18:14 | பார்வைகள் : 1022


தேர்தல் நெருங்குவதால், மீனவர்களின் ஓட்டுக்களை பெறுவதற்கு கச்சத்தீவை மீட்க வேண்டும் என தீர்மானம் போடுகின்றனர்,'' என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது: கச்சத்தீவை கொடுத்ததற்கு, அங்கு ஒரு சொட்டு தண்ணீர் இல்லை என காரணம் சொல்கின்றனர். இவர்கள் ஆழ்ந்த அறிவை பார்க்க வேண்டும். கடலுக்கு நடுவில் இருக்கும் தீவில் தண்ணீர் இல்லை என்கின்றனர். வேறு காரணம் கூறினால் கூட சிரிக்கலாம். இப்படி ஒரு காரணத்தை கூறினால் தலையில் அடித்து அழுவதைத் தவிர வேறு வழியில்லை.

நேற்று முன்தினம் எடுத்து கொடுத்துள்ளனர். இதனால், நேற்று கச்சத்தீவுக்கு எதிராக தீர்மானம் போடுகின்றனர். கச்சத்தீவை கொடுத்தது காங்கிரஸ். அதற்கு , பதவிக்காக கூட நின்றது தி.மு.க., இவ்வளவு காலத்தில் அதிகாரத்தில் இருந்த கட்சிகள் போரிட்டு மீட்காமல், தேர்தல் வரும் போது, மீனவர்களுக்காக நாங்கள் போராட்டம் நடத்தியதால், மீனவர் ஓட்டுக்களை பெற வேண்டும் என்பதற்காக கச்சத்தீவு தீர்மானத்தை கொண்டு வருகின்றனர்.

ஓட்டுக்காக கபட நாடகம் ஆடுகின்றனர். இளைய தலைமுறையினர் இதனை கவனிக்க வேண்டும். மறுபடியும் இந்த நாடகத்தை மயங்கி கைதட்டி ரசித்துவிட்டு போனால், மிகவும் கஷ்டம். காங்கிரஸ் , பா.ஜ., ஆட்சிக் காலத்தில் கச்சத்தீவு வழக்கில், ' திருப்பி எடுப்பதற்கு பேச்சே இல்லை. கொடுத்தது கொடுத்தது தான், ' என ஒரே பதில் மனுத் தாக்கல் செய்தனர்.

கச்சத்தீவை மீட்கட்டும். பாராட்டு விழா நடத்துவோம். வெற்று தீர்மானமாக இல்லாமல், வெற்றி தீர்மானமாக இருந்தால் பாராட்டுவோம். தொடர்ந்து 18 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் இருந்த ஒரே கட்சி தி.மு.க., தான். வாஜ்பாய், குஜ்ரால், தேவகவுடா, மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் ஆட்சியில் இருந்தனர். அப்போது, தீர்மானம் நிறைவேற்றி நெருக்கடி கொடுத்து இருக்கலாம். இவ்வாறு சீமான் கூறினார.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்