’ஆப்பிள் நுண்ணறிவு’ - பிரான்சில் அறிமுகம்!!

31 பங்குனி 2025 திங்கள் 18:54 | பார்வைகள் : 5506
ஆப்பிள் நிறுவனத்தின் செயற்கை நுண்ணறிவு பிரான்சில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்தின் நடுப்பகுதியில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இரு வாரங்கள் முன்பாகவே பிரான்சில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
ஐபோன் தொலைபேசிகளில் இயங்கக்கூடிய இந்த செயற்கை நுண்ணறிவு iOS 18.4 மென்பொருள் மேம்படுத்தல் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும். iPhone 15 Pro, Max, iPhone 16, 16 Pro, 16 Pro Max, 16e போன்ற தொலைபேசிகளில் தற்போது இது கிடைக்கிறது. இன்று மார்ச் 31 ஆம் திகதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த மென்பொருள் மூலம் மேற்படி நுண்ணறிவு வசதிகள் வழங்கப்படுகின்றன.
அதேபோல், ஆப்பிள் கணணிகளிலும் இந்த செயற்கை நுண்ணறிவு வழங்கப்பட்டுள்ளன. MacOS 18.4 மென்பொருளை மேம்படுத்துவதன் ஊடாக இதனை பெற்றுக்கொள்ள முடியும்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025