எக்ஸ் தளத்தை விற்பனை செய்த எலோன் மஸ்க்!
29 பங்குனி 2025 சனி 10:34 | பார்வைகள் : 5244
எக்ஸ் தளத்தை 45 பில்லியன் டொலருக்கு எலோன் மஸ்க் விற்பனை செய்துள்ளார்.
எலோன் மஸ்க் தனது எக்ஸ் ஏ.ஐ. நிறுவனத்துக்கே எக்ஸ் தள நிறுவனத்தை விற்பனை செய்துள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
2022 ஆண்டு ஈலோன் மஸ்க் டுவிட்டரை வாங்கச் செலுத்திய தொகையுடன் ஒப்பிடுகையில் இது அதிகமாகும்.
எக்ஸ் ஏ.ஐ நிறுவனமும் எலான் மஸ்க்குக்கு சொந்தமான நிறுவனமாகும். ஆனால் புதிய ஒப்பந்தத்தில் 12 பில்லியன் டொலர் கடன் உள்ளடங்குவதாகச் சர்வதேச ஊடகங்கள் குறிப்பிடுகின்றன.
அதன்படி எக்ஸ் தளத்திற்காக 33 பில்லியன் டொலர் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாக ஈலோன் மஸ்க் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன் இந்த ஒன்றிணைந்த நிறுவனங்களின் மொத்தத்தொகை 80 பில்லியன் டொலராகும் என்றும் தெரிவிக்கபப்ட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan