110 கி.மீ புயல்! - 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை!!
29 பங்குனி 2025 சனி 07:00 | பார்வைகள் : 14298
இன்று மார்ச் 29, சனிக்கிழமை நாட்டின் 10 மாவட்டங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மத்திய தலைக்கடலில் ஏற்படும் இந்த புயல் பிரான்சின் தெற்கு பிராந்தியங்களை தாக்கும் எனவும், மணிக்கு 110 கி.மீ வேகத்தில் தாக்கும் எனவும் Météo-France எச்சரித்துள்ளது. Ardèche, Ariège, Aude, Bouches-du-Rhône, Drôme, Gard, Haute-Garonne, Hautes-Pyrénées, Pyrénées-Orientales மற்றும் Vaucluse மாவட்டங்களுக்கு இந்த புயல் காரணமாக ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புயல் இன்று இரவும் படிப்படியாக செயலிழக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுகிறது.

அதேவேளை, Somme மற்றும் Gironde ஆகிய இரு மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்யும் எனவும், இதனால் அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டு குறித்த இரு மாவட்டங்களுக்கும் மஞ்சள் நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்

















Annuaire
Scan