Paristamil Navigation Paristamil advert login

சிக்கன் மிளகு சுக்கா.

சிக்கன் மிளகு சுக்கா.

27 பங்குனி 2025 வியாழன் 14:30 | பார்வைகள் : 3269


உணவிற்கே பேமஸ் ஆக இருக்கக்கூடிய மதுரையில் சிக்கன் மூலமாக மதுரையின் சிக்கன் மிளகு சுக்கா செய்வது எப்படி என்பதை இதில் தெரிந்து கொள்வோமா...

தேவையான பொருட்கள்:
1/2 கிலோ சிக்கன், 50 கிராம் சின்னவெங்காயம், 1 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது, 3 ஸ்பூன் நல்லெண்ணெய், 3 ஸ்பூன் மிளகு, 1/2 ஸ்பூன் சோம்பு, 1துண்டு பட்டை, 3கிராம்பு, 2ஏலக்காய், 1 ஸ்பூன் சீரகம், 1 ஸ்பூன் மிளகாய் தூள், தேவையான அளவுஉப்பு, 1 ஸ்பூன் மல்லி தூள்

முதலில் ஒரு கடாயில் மிளகு, சீரகம், பட்டை, ஏலக்காய், கிராம்பு, சோம்பு போன்றவற்றை வறுத்துப் பொடிக்கவும்.சின்ன வெங்காயம் கருவேப்பிலை இரண்டையும் பொடியாக நறுக்கி தனியே வைக்கவும்.

கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் நறுக்கிய வெங்காயம் கருவேப்பிலையை பொன்னிறமாகும் வரை வதக்கவும்..வெங்காயத்துடன் இஞ்சி பூண்டு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

இதனுடன் சிக்கன் துண்டுகள் சேர்த்து மஞ்சள் தூள் சேர்த்து நன்கு எண்ணெயிலேயே வதக்கவும். பின்னர் மல்லி தூள், மிளகாய் தூள் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கிய பின்பு தேவையான அளவு தண்ணீர் தெளித்து வேகவிடவும்.

இதனுடன் வறுத்துப் பொடித்த மசாலாவை சேர்த்து நன்கு எண்ணெய் பிரிந்து வரும் வரை வதக்கி கொண்டே இருக்கவும். என்னை பிரிந்து மசாலா சிக்கனுடன் ஒட்டி வரும் பொழுது அடுப்பை அணைத்து இறக்கவும். அவ்வளவுதான் சுவையான மதுரை சிக்கன் மிளகு சுக்கா ரெடி.

6 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

சதீஸ்குமார் அபிசன்

வயது : 21

இறப்பு : 07 Dec 2025

  • Ecology

    2

வர்த்தக‌ விளம்பரங்கள்