பரிசில் பாதசாரிகளுக்கான 500 பாதைகள்! - வாக்கெடுப்பில் 50,000 இற்கும் அதிகமானோர் பங்கேற்பு!!

24 பங்குனி 2025 திங்கள் 08:44 | பார்வைகள் : 4892
பரிசில் பாதசாரிகளுக்கான 500 சாலைகள் அமைக்கும் திட்டம் ஒன்றை பரிஸ் நகரசபை முன்னெடுத்துள்ளது. இந்நிலையில், இந்த சாலைகள் அமைப்பதற்கான ஆதரவு தொடர்பில் மக்களிடன் வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது.
நேற்று மார்ச் 23, ஞாயிற்றுக்கிழமை இந்த வாக்கெடுப்பு பரிஸ் நகரம் முழுவதும் இடம்பெற்றது. 218 வாக்குச்சாவடிகழ்ல் அமைக்கப்பட்டு, வாக்கெடுக்கப்பட்டது. 1.391 மில்லியன் பேர் வாக்களிக்க தகுயுடைய நிலையில், 56,500 பேர் வாக்களித்திருந்தனர்.
வாக்களிப்பு நிலவரப்படி, பாதசாரிகளுக்கான பாதைகள் அமைக்க ஆதரவாக 66% சதவீதமான மக்கள் ஆதரவு வாக்களித்தனர்.