புயல் : மரம் முறிந்து விழுந்து ஒருவர் பலி!!

22 பங்குனி 2025 சனி 07:00 | பார்வைகள் : 8490
நேற்று மார்ச் 21, வெள்ளிக்கிழமை Toulouse நகரை தாக்கிய புயல் காரணமாக ஒருவர் பலியாகியுள்ளார்.
Toulouse நகருக்கு நேற்றைய தினம் புயல் காரணமாக செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் புயல் பதிவாகியிருந்தது. மரங்கள் முறிந்து விழுந்து நான்கு மகிழுந்துகள் சேதமாகியிருந்தன. இதில் நபர் ஒருவர் பலியாகியுள்ளார்.
Haute-Garonne மற்றும் Tarn மாவட்டங்களில் பல இடங்களில் மரங்கள் முறிந்துள்ளன. சில இடங்களில் மின்சாரத்தடையும், சில இடங்களில் போக்குவரத்து தடையும் ஏற்பட்டிருந்தன.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025