காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல் - 71 பேர் பலி
 
                    20 பங்குனி 2025 வியாழன் 16:16 | பார்வைகள் : 2320
காஸாவில் இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட 71 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதுடன் இதுவரையில் 61,700 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக காஸா ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
காஸாவின் வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இன்று இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்த தாக்குதலில் குழந்தைகள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட 71 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
போர் நிறுத்தம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதன் பின்னர், இதுவரையில் 183 குழந்தைகள் உள்ளிட்ட சுமார் 436 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக காஸா சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
அத்துடன், காஸா மீது இஸ்ரேல் மேற்கொண்ட தாக்குதலில் இதுவரையில் 49,547 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதுடன், ஒரு இலட்சத்து 12,719 பேர் காயமடைந்துள்ளதாக அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
        சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan