Paristamil Navigation Paristamil advert login

19 மில்லியன் யூரோக்கள் வென்ற தந்தையும் மகள் கூட்டணி!

19 மில்லியன் யூரோக்கள் வென்ற தந்தையும் மகள் கூட்டணி!

20 பங்குனி 2025 வியாழன் 14:38 | பார்வைகள் : 4195


தந்தையும் மகளும் இணைந்து Loto அதிஷ்ட்டலாபச் சீட்டிழுப்பில் 19 மில்லியன் யூரோக்கள் வென்றுள்ளனர்.

பெப்ரவரி 26 ஆம் திகதி இடம்பெற்ற சீட்டிழுப்பில் Marseillan (Hérault) நகரைச் சேர்ந்த தந்தை மற்றும் மகள் இந்த தொகையை வென்றதாக Loto சீட்டிழுப்பின் தாய் நிறுவனமான FDJ அறிவித்துள்ளது. அதிஷ்ட்டாலபச் சீட்டு விற்பனை முகவர் ஒருவரை சந்தித்த இருவரும், தங்களுக்கு தோன்றிய இலக்கங்களை அழுத்தி ஒரு சீட்டினை பெற்றுக்கொண்டுள்ளனர்.

பின்னர், பெப்ரவரி 20 ஆம் திகதி அன்று அவர்களுக்கான சீட்டிழுப்பு இடம்பெற்ற போது, அவர்கள் தெரிவு செய்த இலக்கங்களுக்கு 19 மில்லியன் யூரோக்கள் பரிசுத்தொகை விழுந்துள்ளது. இந்த தந்தை மகள் கூட்டணி, மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்பதாக FDJ அறிவித்துள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்