Alfortville : மாணவனுக்கு கத்திக்குத்து!!

17 பங்குனி 2025 திங்கள் 17:07 | பார்வைகள் : 4329
உயர்கல்வி மாணவன் ஒருவன் கத்திக்குத்துக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளான். Alfortville
(Val-de-Marne) நகரில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அங்குள்ள lycée Maximilien Perret லீசேயின் மதிய இடைவேளையின் போது (முற்பகல் 11.25 மணிக்கு) இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. மாணவனது தலையில் கத்தியால் வெட்டப்பட்டதாகவும், காயமடைந்த அவர் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதலாளி கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த தாக்குதல் சம்பவத்துக்கு தேசிய கல்வி அமைச்சர் Elisabeth Borne கண்டனம் தெரிவித்துள்ளார்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025