ஒற்றுமையே பலம்.. முதலாவது 'கொவிட் 19' உள்ளிருப்பு நாளை நினைவுபடுத்திய மக்ரோன்!!

17 பங்குனி 2025 திங்கள் 07:00 | பார்வைகள் : 5623
ஐந்து ஆண்டுகளுக்கு முன்னர், மார்ச் 17, 2020 ஆம் ஆண்டு பிரான்ஸ் கொவிட் 19 தொற்றுக்கு எதிராக முதலாவது உள்ளிருப்பினை சந்தித்தது. வீடுகளை விட்டு வெளியேறாமல், சக மனிதர்களுடன் நெருங்காமல் தனித்தனியாக குடும்பத்தினருடன் நேரம் செலவிடக்காரணமாக இருந்த இந்த உள்ளிருப்பு 'எங்களுக்குள் ஒற்றுமையை விதைத்தது' என ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் குறிப்பிட்டார்.
உள்ளிருப்பு நாட்களை நினைவுபடுத்தி தனது X வலைத்தளத்தில் நீண்ட பதிவொன்றை எழுதிய மக்ரோன், அதில் இதனைக் குறிப்பிட்டார்.
'பிரான்ஸ் உள்ளிருப்பை எதிர்கொண்டது. ஆனால் வேலைகளை, முயற்சிகளைக் கைவிடவில்லை. துன்பங்களை மகிழ்ச்சியுடன் ஒற்றுமையாக எதிர்கொண்டோம். நாங்கள் ஒருவரை ஒருவர் பராமரித்தோம். கடினமான நாட்களில் இருந்து மெல்ல மெல்ல விடுதலையானோம்!' என மக்ரோன் குறிப்பிட்டார்.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1