Paristamil Navigation Paristamil advert login

சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்த டிராகன் விண்கலம்

சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணைந்த டிராகன் விண்கலம்

17 பங்குனி 2025 திங்கள் 03:43 | பார்வைகள் : 1574


சுனிதா வில்லியம்ஸ் மற்றும் வில்மோர் ஆகியோரை சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து பூமிக்கு அழைத்து வருவதற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனமும் நாசா அமைப்பும் இணைந்து விண்கலம் ஒன்றை அனுப்பியிருந்தது.

நேற்றிரவு 11.30 ற்கு இந்த விண்கலம் சென்றடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் எனினும் இன்று காலை 9.40ற்கு இந்த விண்கலம் சென்றடைந்துள்ளது.

எதிர்வரும் 17 ஆம் திகதி இந்த விண்கலத்தின் ஊடாக இருவரும் பூமிக்குத் திரும்புவார்கள் என தெரிவிக்கப்படுகிறது. இதனால், நீண்டகாலம் காத்திருக்கும் சுனிதா மற்றும் வில்மோர் இருவரும் பூமிக்கு திரும்புவதற்கான முக்கிய நடவடிக்கை நிறைவடையும் நிலையில் உள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையத்துடன் ட்ராகன் விண்கலம் இணையும் காணொளியை  எலான் மஸ்க் வெளியிட்டு உள்ளார். விஞ்ஞானி டான் பெடிட், டிராகன் விண்கலத்தில் இருந்தபடி, எடுத்த காணொளியை மஸ்க் தன்னுடைய எக்ஸ் சமூக ஊடகத்தில் பகிர்ந்துள்ளார்.

 

6 நாள்கள் முன்னர்

நினைவஞ்சலி

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்