பாகிஸ்தானில் பயங்கரவாத தாக்குதல் - பாதுகாப்பு படையினர் 5 பேர் பலி
17 பங்குனி 2025 திங்கள் 03:37 | பார்வைகள் : 8974
வன்முறையால் பாதிக்கப்பட்ட பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பிராந்தியத்தில் 16 மற்றொரு துயர சம்பவம் பதிவாகியுள்ளது.
நுஷ்கி-தல்பண்டின் நெடுஞ்சாலையில் பயணிகள் பேருந்து அருகே இடம்பெற்ற குண்டுவெடிப்பில் குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 35 பேர் காயமடைந்ததாக பாகிஸ்தானின் ஜியோ நியூஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
இருப்பினும், குண்டுவெடிப்பின் தன்மையையோ அல்லது அதன் காரணத்தையோ அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.
குண்டுவெடிப்பு நடந்த உடனேயே காயமடைந்தவர்கள் உடனடியாக நுஷ்கி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்டவர்களில் இருவர் படுகாயமடைந்துள்ளனர் என்று அவர்கள் மேலும் தெரிவித்தனர்.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan