பதினொரு வயதுச் சிறுமி படுகொலை - அதிரும் அரசியற்களம்!!

9 மாசி 2025 ஞாயிறு 08:59 | பார்வைகள் : 7634
கடந்த வெள்ளிக்கிழமை 7ம் திகதி கொலேஜ் சென்ற 11 வயதுடைய லூயிஸ் (LOUISE) எனும் சிறுமி வீடு திரும்பாததையிட்டு காவவற்துறையினர் பெரும் முயற்சி எடுத்துத் தேடுதல் நடாத்தினர்.
7ம் திகதி வெள்ளி இரவு, மற்றும் 8ம் திகதி அதிகாலைக்குள் இந்தச் சிறுமியின் உடலம், சிறுமியின் வீட்டிலிருந்து அதிகத் தொலைவில்லாத, Longjumeau காட்டினுள் கண்டெடுக்கபபட்டது.
இது எப்பினே-சூர்-ஓர்ஜ் (Epinay-sur-Orge) மக்களைப் பெரிதும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இந்த நகரத்தின்; கொலேஜிலேயே லூயிஸ் கல்வி கற்றிருந்தார். இங்கேயே இரவது குடும்பம் வசித்து வருகின்றது.
இது மக்களை மட்டும் அல்லாது நகரபிதவையும் பல அரசியல் பிரமுகர்களையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
உள்துறை அமைச்சர் புரூனோ ரத்தையோ (Bruno Retailleau)
«இன்று சிறுமி லூயிஸின் உயிரற்ற உடல் கண்டெடுக்கப்பட்டது. அவரது அன்புக்குரியவர்களின் வாழ்க்கையிலிருந்தும் அன்பிலிருந்தும் ஒரு அப்பாவி உயிர் பறிக்கப்பட்டுள்ளது.. தற்போது விசாரணைகள் துரிதப்பட்டுள்ளன. ஆனால் சோகமும் கோபமும் ஒவ்வொரு பிரெஞ்சு மக்களையும் ஆக்கிரமித்துள்ளது. நான் அவரது குடும்பத்தினரை நினைத்துப் பார்க்கின்றேன். அவர்களது மிகுந்த வலிக்கு எனது அனுதாபங்கள்»
எனத் தெரிவித்துள்ளார்.
வலதுசாரிகளின் குடியரசுக் கூட்மைப்பின் தலைவர் எரிக் சியோத்தி (நுசiஉ ஊழைவவ)
«இந்தச் சிறுமியின் சாவு மேலும் ஒரு பெரும் துன்பச் செயலாக உள்ளது. நான் அவர்களின் குடும்பத்தின் துயரத்தில் பங்கு கொள்கின்றேன். இந்தப் படுகொலைக்கான நீதியை இந்த அரசு வழங்கும் என நம்புகின்றேன்»
எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பல அரசியற்தலைவர்கள், நகரபிதாக்கள், என ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துள்துடன் பெரும் கோபத்தையும் வெளிப்படுத்தி உள்ளனர்.