■ Val-d'Oise : முதியோர் காப்பகத்தில் தீ.. மூவர் பலி.. மேலும் பலர் உயிருக்கு போராட்டம்!!

1 மாசி 2025 சனி 12:08 | பார்வைகள் : 9015
பெப்ரவரி 1, இன்று சனிக்கிழமை காலை முதியோர் காப்பகம் ஒன்றில் ஏற்பட்ட தீ பரவலில், மூவர் பலியாகியுள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
Bouffémont (Val-d'Oise) நகரில் உள்ள முதியோர் காப்பகம் ஒன்றில் காலை 7.20 மணி அளவில் தீ பரவியுள்ளது. 80 வரையான முதியோர்கள் அங்கு வசித்து வந்த நிலையில், திடீரென ஏற்பட்ட தீயில் சிக்கி மூவர் பலியாகியுள்ளனர்.
உடனடியாக தீயணைப்பு படையினர் அழைக்கப்பட்டு தீ கட்டுப்படுத்தப்பட்டது. இருந்தபோதும் 20 பேர் வரை தீக்காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்களில் மூவர் பலியாக, எட்டு பேர் வரை அவசரப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
முதியோர் காப்பகத்தில் ஏற்பட்ட தீ விபத்து அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
6 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. வீரவாகு முகுந்தன்
Bremen (Germany), கரவெட்டி
வயது : 53
இறப்பு : 29 Jul 2025