Paristamil Navigation Paristamil advert login

மருத்துவரை தாக்கி தொலைபேசி பறிக்க முயன்ற அகதிகள்.. - ஒன்பது பேர் கைது!!

மருத்துவரை தாக்கி தொலைபேசி பறிக்க முயன்ற அகதிகள்.. - ஒன்பது பேர் கைது!!

31 தை 2025 வெள்ளி 19:16 | பார்வைகள் : 8305


மருத்துவர் ஒருவரை தாக்கி அவரிடம் இருந்து தொலைபேசி ஒன்றை பறிக்க முற்பட்ட ஒன்பது அகதிகளை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இச்சம்பவம் பா-து-கலே மாவட்ட மருத்துவகனையில் இடம்பெற்றுள்ளது. ஜனவரி 28, செவ்வாய்க்கிழமை மாலை 7.45 மணி அளவில் மருத்துவமனைக்குள் கத்தி, இரும்புக்கம்பிகள் போன்ற ஆயுதங்களுடன் உள் நுழைந்த இருபது வரையான அகதிகள், மருத்துவமனையில் இருந்தவர்களை தாக்கியுள்ளனர்.

பின்னர் அங்கிருந்த மருத்துவரையும் தாக்கி, அவரிடம் இருந்து தொலைபேசியினை பறிக்க முற்பட்டுள்ளனர்.

அதற்கிடையில் காவல்துறையினர் தலையிட்டு நிலமைகளை கட்டுப்படுத்தினர். மொத்தமாக ஒன்பது பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அறியமுடிகிறது.

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்