Paristamil Navigation Paristamil advert login

Joyeux Noël !

Paristamil.com vous offre un bon cadeau de

50€

pour publier vos annonces
Connectez-vous pour en bénéficier dès maintenant !

அமெரிக்கவை உலுக்கிய விமான விபத்து - பயணித்த 67 பேரும் உயிரிழந்திருக்கலாம்

அமெரிக்கவை உலுக்கிய விமான விபத்து -  பயணித்த 67 பேரும்   உயிரிழந்திருக்கலாம்

31 தை 2025 வெள்ளி 13:27 | பார்வைகள் : 6995


அமெரிக்க இராணுவ ஹெலிக்கொப்டருடன் மோதி ஆற்றில் விழுந்து நொருங்கிய அமெரிக்க எயர்லைன்ஸ் விமானத்தில் பயணித்த 67 பேரும் உயிரிழந்திருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த விமான வித்தில் இந்திய இளம் விமானியான சாம் லில்லே தனது திருமண நாளிற்காக காத்திருந்த இளம் விமானி, ஓடுபாதையில் தரையிறங்குவதற்கு ஒருசில நிமிடங்களிற்கு முன்னர் அமெரிக்க இராணுவ ஹெலிக்கொப்டருடன் மோதிய அமெரிக்க எயர்லைன்ஸ் பயணிகள் விமானத்தை செலுத்தியவர் என கூறப்படுகின்றது.

நடுவானில் மோதுண்ட விமானமும் ஹெலிக்கொப்டரும் அதன் பயணித்தவர்களுடன் வேர்ஜீனியாவின் பொட்டொமக் ஆற்றில் விழுந்தன. சாம் விமானவோட்டியாக பணிபுரிய ஆரம்பித்தவேளை நான் மிகவும் பெருமிதம் அடைந்தேன் என தெரிவிக்கின்றார் அவரின் தந்தை டிமோதி.

மகனின் இழப்பு என்னை மிக மோசமாக பாதிக்கின்றது என குறிப்பிட்டுள்ள அவர் என்னால் அழக்கூடியமுடியவில்லை உறங்கமுடியவில்லை என தெரிவிக்கின்றார்.

நான் அவனை மீண்டும் பார்ப்பேன் என தெரியும் ஆனால் எனது இதயம் வேதனையால் துடிக்கின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார். நான் மிகவும் நேசித்த ஒருவரை இழப்பது பெரும்துயரம் என தெரிவித்துள்ள தந்தை,எனது வாழ்க்கையின் மிக மோசமான நாள் இது எனவும் தெரிவித்துள்ளார்.

துயரத்தில் சிக்குண்டுள்ள தந்தை 20 வருடங்களாக அமெரிக்க இராணுவ விமானியாக பணிபுரிந்தவர்.பயணிகள் விமானம் சரியான நடைமுறையையே பின்பற்றியது என கருதுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஹெலிக்கொப்டரின் இராணுவவிமானி மிகப்பெரும் தவறிழைத்துள்ளார் அது என்னை காயப்படுத்தியுள்ளது ஏனென்றால் அவர்கள் எனது சகோதாரர்கள் நான் எனது மகனையும் இழந்துவிட்டேன் என அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க எயர்லைன்ஸ் விமானத்தின் தலைமை விமானியான ஜொனதன் கம்போசும் உயிரிழந்துள்ளார்,2022 இல் கொம்போஸ் விமானத்தின் கப்டனாக பணிபுரிய ஆரம்பித்தார் என அவரை நன்கு அறிந்தவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

விமானவிபத்தில் உயிரிழந்தவர்களில் அஸ்வரா ஹ_சைன் ராசாவும்( 26) ஒருவர் என அவரின் மாமனார் வைத்தியர் ஹசீம் ராசா சிஎன்என்னிற்கு தெரிவித்தார். இந்திய வம்சாவளியினரின் மகளான இவர் 2020 இல் இந்தியானா பல்கலைகழகத்தில் பட்டப்படிப்பை பூர்;த்தி செய்து 2023 ஆகஸ்ட்டில் தனது காதலனை கரம்பிடித்தார்.

ராசா வோசிங்டன் டிசியை தளமாக கொண்ட ஒரு ஆலோசகர்,அவர் விசிட்டாவிற்கு மாதத்திற்கு இரண்டு முறை பயணம் செய்து அங்குள்ள ஒரு மருத்துவமனை திட்டத்தில் பணியாற்றினார் என அவரது மாமனார் தெரிவித்துள்ளார்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்