Paristamil Navigation Paristamil advert login

ஜனாதிபதி அநுரவின் யாழ். வருகையின் போது ஆர்ப்பாட்டங்களுக்கு தடை

ஜனாதிபதி அநுரவின் யாழ். வருகையின் போது ஆர்ப்பாட்டங்களுக்கு தடை

30 தை 2025 வியாழன் 15:37 | பார்வைகள் : 4298


ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் யாழ்ப்பாண வருகையின் போது போராட்டம் நடத்துவதற்கு தடை விதிக்க கோரி யாழ்ப்பாணம் பொலிஸார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டம், பொதுமக்கள் சந்திப்பு என சில நிகழ்வுகளில் பங்கேற்பதற்காக எதிர்வரும் 31 ஆம் திகதி யாழ்ப்பாண மாவட்டத்திற்கு செல்லவுள்ளார்.

ஜனாதிபதியின் வருகையின் போது போராட்டம் நடத்துவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கம் உள்ளிட்டவை அழைப்பு விடுத்திருந்தன.

இந்நிலையில் போராட்டம் நடத்துவதை தடை செய்யக்கோரி யாழ்ப்பாணம் பொலிஸார் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இதனை அடுத்து பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத் தலைவர் உள்ளிட்ட ஐவரை நாளை வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்புக் கட்டளை அனுப்ப யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

வர்த்தக‌ விளம்பரங்கள்