மாவை எதிர்பார்த்தவற்றை நிச்சயம் நாம் செய்வோம் - அமைச்சர் இராமலிங்கம்
30 தை 2025 வியாழன் 11:05 | பார்வைகள் : 5621
மாவை அண்ணன் மறைந்தாலும் மக்களுக்காக அவர் எதிர்பார்த்தவற்றை நிச்சயம் நாம் செய்வோம் என கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் மூத்த தலைவர் மாவை சேனாதிராஜாவின் மறைவுக்கான இரங்கல் செய்தியில் இவ்வாறு குறிப்பிட்ட அவர் மேலும் தெரிவித்ததாவது,
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் சிரேஷ்ட தலைவரான, யாழ்ப்பாண மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜாவின் மறைவு செய்தி பெரும் மன வேதனையை தருகிறது. அவரின் மறைவானது தமிழ் அரசுக் கட்சிக்கும் தமிழ் மக்களுக்கும் பேரிழப்பாகும்.
அநீதிக்கு எதிராகவும் நீதிக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் துணிந்து குரல் கொடுத்த மாவை சேனாதிராஜா, ஜே.வி.பியின் ஸ்தாபகர் - தோழர் ரோஹண விஜேவீரவின் போராட்டங்களைக் கூட நேர்கொண்ட பார்வையுடன் அவதானித்தார்.
ஆட்சியாளர்களின் அடக்குமுறைக்கு எதிராக ஜே.பி.யின் அணுகுமுறை தொடர்பில் ஆதரவு போக்கை கடைபிடித்தவர்.
5 தசாப்தகால அரசியல் பயணத்தின்போது, மக்களின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமை அளித்து செயற்பட்ட அரசியல்வாதி ஆவார்.
மாவை அண்ணன் மறைந்தாலும் மக்களுக்காக அவர் எதிர்பார்த்தவற்றை நிச்சயம் நாம் செய்வோம்.
மாவை சேனாதிராஜா அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் அன்னாரின் குடும்பத்தார், ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கின்றேன். அன்னாரின் ஆத்மா இளைப்பாற இறைவனை பிரார்த்திக்கிறேன் என்றார்.
8 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
3






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan