ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கை - அவுஸ்திரேலியாவில் தவிக்கும் மக்கள்
30 தை 2025 வியாழன் 09:12 | பார்வைகள் : 11305
அமெரிக்க அரசாங்கத்தால் ஏற்கனவே அகதிகளாக ஏற்றுக்கொள்ளப்பட்டும், தற்போதைய டொனால்டு ட்ரம்ப் நிர்வாகத்தால் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மக்கள் அவுஸ்திரேலியாவில் சிக்கியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் குடியேறலாம் என்ற கனவுடன் படகு மூலமாக பத்தாண்டுகளுக்கு முன்னர் அவுஸ்திரேலியாவுக்கு சென்ற டசின் கணக்கான மக்களே தற்போது ட்ரம்ப் நிர்வாகத்தின் அதிரடி நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பில் அமெரிக்க அரசாங்கத்தின் விளக்கத்திற்காக அவுஸ்திரேலியா அரசாங்கம் காத்திருப்பதாக அதிகாரிகள் தரப்பு தெரிவித்துள்ளனர்.
தற்போது அமெரிக்க மீள்குடியேற்ற ஏற்பாட்டின் மூலம் 30க்கும் குறைவான நபர்கள் அமெரிக்காவில் மீள்குடியேற்றத்திற்காக காத்திருப்பதாகவே அவுஸ்திரேலிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொதுவாக படகு மூலம் வரும் புகலிடக் கோரிக்கையாளர்களை அவுஸ்திரேலியா நிர்வாகம் குடியேற அனுமதிப்பதில்லை. ஆனால் படகு மூலம் வந்தவர்கள், அகதிகள் கோரிக்கைகளை மதிப்பிடுவதற்காக பசிபிக் தீவு நாடுகளான நௌரு மற்றும் பப்புவா நியூ கினியா முகாம்களுக்கு மாற்றப்பட்டனர்.
2016ல் ஒபாமா நிர்வாகத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், பப்புவா நியூ கினியா மற்றும் நௌரு கடல்சார் செயலாக்க மையங்களில் இருந்து 1250 அகதிகளை மீள்குடியேற்ற அமெரிக்கா ஒப்புக்கொண்டது.
ட்ரம்பின் முதலாம் ஆட்சியின் போது இந்த ஒப்பந்தம் தொடர்பில் அவர் எதிர்ப்பு தெரிவித்திருந்தாலும் ஒருகட்டத்தில் ஏற்றுக்கொண்டார். இதனால், 1106 பேர்கள் அவுஸ்திரேலியாவில் இருந்து அமெரிக்காவில் குடியேறினர்.
இருப்பினும் சிலர் பல்வேறு நடைமுறைகளால் பாதிக்கப்பட்டனர். அவர்களே தற்போது புதிய ட்ரம்ப் நிர்வாகத்தால் செய்வதறியாது திகைத்துள்ளனர்.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Ajouter
Annuaire
Scan