தனது காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய ரொனால்டோ - வைரல் புகைப்படம்
29 தை 2025 புதன் 09:25 | பார்வைகள் : 3803
கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது காதலிக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய பதிவு வைரலாகியுள்ளது.
போர்த்துக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ (Cristiano Ronaldo) பல சாதனைகளை படைத்து ஜாம்பவானாக திகழ்கிறார்.
39 வயதாகும் ரொனால்டோ, அர்ஜென்டினாவின் மொடலான ஜார்ஜினா ரோட்ரிகாஸ் உடன் 9 ஆண்டுகளாக வாழ்ந்து வருகிறார். இவர்களுக்கு 5 பிள்ளைகள் உள்ளனர்.
நேற்றைய தினம் ஜியார்ஜினா தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருடன் இருக்கும் புகைப்படத்தை ரொனால்டோ பகிர்ந்திருந்தார்.
அவரது பதிவில், "உன் ஒளி எங்களை ஒளிர செய்கிறது மற்றும் உனது அன்பு எங்களை தொற்றிக் கொள்கிறது. ஒரு தாயாகவும், துணையாகவும், தோழியாகவும், என் மனைவியாகவும் இருக்கும் உனக்கு பிறந்தாள் வாழ்த்துக்கள் அன்பே" என குறிப்பிட்டுள்ளார்.
அவரது இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது. பதிவிட்ட ஒரு மணிநேரத்தில் 8.5 மில்லியன் லைக்ஸ்-ஐ அள்ளியது.

























Bons Plans
Annuaire
Scan