Paristamil Navigation Paristamil advert login

நியூசிலாந்தை உலுக்கிய நிலநடுக்கம்

நியூசிலாந்தை உலுக்கிய நிலநடுக்கம்

29 தை 2025 புதன் 08:24 | பார்வைகள் : 3625


நியூசிலாந்தை நள்ளிரவில் நிலநடுக்கம் உலுக்கிய நிலையில், மக்கள் நிற்கக்கூட முடியாமல் தடுமாறியதாகத் தெரிவித்துள்ளார்கள்.

நியூசிலாந்தை, உள்ளூர் நேரப்படி நள்ளிரவுக்கு முன் நிலநடுக்கம் ஒன்று தாக்கியுள்ளது.

ரிக்டர் அளவுகோலில் 5.4ஆக பதிவாகியுள்ள அந்த நிலநடுக்கத்தை அந்தப் பகுதியில் வாழும் 1.2 மில்லியன் மக்கள் உணர்ந்திருக்கக்கூடும் என ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கம் உருவான மையப்பகுதிக்கு அருகில் வாழும் மக்களால், நிற்கக்கூட முடியாத அளவுக்கு அந்த நிலநடுக்கம் கடுமையானதாக இருந்ததாக சிலர் சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார்கள்.

ஆனால், நிலநடுக்கம் காரணமாக ஏதேனும் சேதம் ஏற்பட்டதா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்