வழிபாட்டுத்தலங்களில் அதிரடியாக தேடுதல் நடவடிக்கைகள் - அமெரிக்க நகரங்களில் பரபரப்பு
27 தை 2025 திங்கள் 17:07 | பார்வைகள் : 4577
அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியுள்ளவர்களை நாட்டை விட்டு நாடு கடத்துவதற்கு ட்ரம்பின் அரசாங்கமானது தீவிரம் காட்டி வருகின்றது.
சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்தும் ட்ரம்பின் அதிரடி நடவடிக்கைகளில் ஒன்றாக, அதிகாரிகள் வழிபாட்டுத் தலங்களைக் குறிவைத்துள்ளதால் அமெரிக்க நகரங்கள் சிலவற்றில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நியூயார்க் மற்றும் நியூ ஜெர்ஸி ஆகிய நகரங்களில் அமைந்துள்ள சில குருத்வாராக்கள், சீக்கிய பிரிவினைவாதிகள், சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் மற்றும், ஆவணங்களற்ற புலம்பெயர்ந்தோர் தங்கும் பாதுகாப்பான இடங்களாக செயல்படுவதாக அதிகாரிகள் கருதுகிறார்கள்.
ஆகவே, அந்த குருத்வாராக்களுக்கு புலம்பெயர்தல் மற்றும் சுங்கத்துறை மற்றும் எல்லை பாதுகாப்பு, சுங்கத்துறை அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளார்கள்.
இதுபோன்ற வழிபாட்டுத் தலங்களுக்குள்ளும் அருகிலும் சோதனையிட ஜோ பைடன் அரசு தடை விதித்திருந்தது.
ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பதவியேற்ற சிறிது நேரத்தில், அந்த தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதைத் தொடர்ந்து, நியூயார்க் மற்றும் நியூ ஜெர்ஸி ஆகிய நகரங்களில் அமைந்துள்ள சில குருத்வாராக்களில் சட்டவிரோத புலம்பெயர்ந்தோர் தங்கியிருக்கிறார்களா என்று சோதனையிடுவதற்காக அங்கு அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளார்கள்.
தங்கள் வழிபாட்டுத்தலங்களுக்கு அதிகாரிகள் அனுப்பப்பட்டுள்ளதால், சீக்கிய மத அமைப்புகள் கோபமடைந்துள்ளன.
அதிகாரிகளின் இந்த நடவடிக்கை அந்நகரங்களில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan