■ விசேட செய்தி : பரிஸ் 12 ஆம் வட்டார நகரசபைக் கட்டிடத்தில் தீ!!

27 தை 2025 திங்கள் 05:11 | பார்வைகள் : 6021
பரிஸ் 12 ஆம் வட்டாரத்தின் நகரசபைக் கட்டிடம் தீப்பிடித்து எரிந்துவருகிறது.
இன்று திங்கட்கிழமை அதிகாலை 3.20 மணி அளவில் தீயணைப்பு படையினர் எச்சரிக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு அழைக்கப்பட்டனர்.
avenue Daumesnil வீதியில் அமைந்துள்ள குறித்த கட்டிடத்தின் மேல் தளத்தில் தீ ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
130 வரையான தீயணைப்பு படையினர் குவிக்கப்பட்டு தீ கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.