நேதாஜி மறைவு குறித்து பதிவு; ராகுல் மீது போலீசார் வழக்குப்பதிவு
27 தை 2025 திங்கள் 04:29 | பார்வைகள் : 8270
நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மரணம் குறித்து கருத்து தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் ராகுல் மீது அகில பாரதிய ஹிந்து மகாசபா அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
நாடு சுதந்திரம் அடைய காரணமானவர்களில் முக்கியமானவர் சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ். இவர் 1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 18ம் தேதி தைவான் நாட்டின் தாய்பேய் நகரில் நடந்த விமான விபத்தில் உயிரிழந்ததாக சொல்லப்படுகிறது. ஆனால், இது தொடர்பாக உறுதியான ஆதாரம் ஏதும் இல்லை.
இந்த சூழலில், கடந்த ஜன.,23ம் தேதி நேதாஜியின் பிறந்த நாளையொட்டி, லோக்சபா எதிர்க்கட்சி தலைவரும், காங்., எம்.பி.,யுமான ராகுல் பதிவு ஒன்றை போட்டிருந்தார். அதில், ஆக.,18ம் தேதி 1945ல் நேதாஜி உயிரிழந்ததாக குறிப்பிட்டிருந்தார்.
அவரது இந்தப் பதிவுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. நேதாஜி உயிரிழந்தது குறித்து எந்த ஆதாரமும் இல்லாத நிலையில், ராகுல் எவ்வாறு தேதியை உறுதி செய்தார் என்று எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேதாஜி மரணம் தொடர்பாக பொய்யான தகவலை பரப்புவதாக ராகுல் மீது தெற்கு கோல்கட்டாவின் பவனிபூர் போலீஸ் ஸ்டேஷனில் அகில பாரதிய ஹிந்து மகாசபா அமைப்பினர் புகார் அளித்துள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இது குறித்து அந்த அமைப்பின் மாநில தலைவர் சந்திரசூட் கோஸ்வாமி கூறுகையில், 'ராகுல் மற்றும் அவரது கட்சியினர் இந்திய மக்களிடம் உள்ள நேதாஜியின் நினைவுகளை அழிக்க முயற்சிக்கின்றனர். இவர்களை இந்திய மக்கள் கடுமையாக தண்டிக்க வேண்டும். நேதாஜி குறித்து பொய்யான தகவலை பரப்பினால், அவர்களுக்கு எதிராக நாங்கள் போராடுவோம்', எனக் கூறினார்.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1
19 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
சதீஸ்குமார் அபிசன்
Mitry-Mory, பண்டதாரிப்பு
வயது : 21
இறப்பு : 07 Dec 2025
-
4






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்
















Ajouter
Annuaire
Scan