வெளியே அழகும், பொலிவும் ஆனால் உடலின் உள்ளே கடுமையான விளைவுகள். ANSM
1 பங்குனி 2025 சனி 07:51 | பார்வைகள் : 12229
மருந்துகள் மற்றும் சுகாதாரப் பொருட்களின் பாதுகாப்புக்கான தேசிய நிறுவனம் (ANSM) கடந்த பெப்ரவரி 27 வியாழக்கிழமை ஒரு செய்திக்குறிப்பில் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. பிரான்ஸ் மருத்துவ அமைப்பிற்கு வெளியே எந்தவிதமான மருத்துவ சான்றளிக்கப்படாத சாதாரண அழகுக்கலை நபர்களால் செலுத்தப்படும் botox ஊசி சட்டவிரோதமானது. எல்லாவற்றிற்கும் மேலாக, அவை ஆரோக்கியத்தில் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நெற்றி, புருவங்கள், உதடுகளை எடுப்பாக காட்டுவதற்காக அழகுகலை நிலையங்களில் சட்டவிரோதமாக செலுத்தப்படும் botox ஊசிகளை செலுத்திக் கொண்டு எட்டு பெண்கள் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அவர்கள் பேசுவதில் சிரமம் விழுங்குவது, நடப்பது, கண் பார்வையில் மங்கல் அல்லது இரட்டைப் பார்வை, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற விளைவுகளை சந்தித்துள்ளனர்.
இந்த நிலை குறித்து தெரிவித்துள்ள மருத்துவர்கள் "மேற்குறிப்பிட்ட பாதிப்புகள் சிலவற்றில் இருந்து அவர்களை காப்பாற்ற முடியும் ஆனால் சில பாதிப்புகள் நிரந்தரமாகவும் அவர்களில் காணப்படும் உதரணமாக பேசுவதில் சிரமம், இரட்டைப் பார்வை, உதட்டில் வலி போன்றுவையை குறிப்பிடலாம்" என எச்சரித்துள்ளனர்.
பாரிஸ் உள்ள அழகுக்கலை நிலையத்தில் botox ஊசிகளை முகம், கண்களைச் சுற்றி செலுத்திக் கொண்டு இரு பெண்களில் ஒருவர் நிரந்தரமாக இரட்டை பார்வை விளைவை சந்தித்துள்ளார் எனவும், மற்றவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் உயிராபத்தான நிலையில் உள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு சீவரத்தினம் பாலேந்திரன்
பரிஸ், பிரான்ஸ், கட்டுவன்
வயது : 58
இறப்பு : 28 Dec 2025
22 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திருமதி. பத்மாவதி கந்தசாமி
கனடா, புங்குடுதீவு
வயது : 94
இறப்பு : 19 Dec 2025
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்












Ajouter
Annuaire
Scan