Paristamil Navigation Paristamil advert login

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக 25 வீத வரி - டிரம்ப்

ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிராக 25 வீத வரி - டிரம்ப்

27 மாசி 2025 வியாழன் 12:00 | பார்வைகள் : 2077


ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிற்கு எதிராக விரைவில் 25 வீதவரியை விதிக்கப்போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிடமிருந்து அளவுக்கதிகமான இலாபத்தை பெறும் நோக்கத்துடனேயே ஐரோப்பிய ஒன்றியம் ஸ்தாபிக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் தனது முதலாவது அமைச்சரவை கூட்டத்தினை  நடத்தியவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை உறுப்பினர் இல்லாத எலொன்மஸ்க் இந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தார்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் மீது வரிகளை விதிப்பது தீர்மானித்துள்ளீர்களா என்ற கேள்விக்கு நாங்கள் ஒரு தீர்மானத்திற்கு வந்துள்ளோம் நாங்கள் விரைவில் இது குறித்துஅறிவிப்போம் 25 வீத வரியாக காணப்படும் கார்கள் மற்றும் ஏனைய பொருட்கள் மீது இந்த வரிவிதிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியம் கனடாவை விட வித்தியாசமான விடயம் அவர்கள் எங்களை வேறு விதத்தில் சாதகமாக பயன்படுத்தியுள்ளனர் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அவர்கள் எங்கள் கார்களை ஏற்றுக்கொள்வதில்லை,எங்கள் விவசாய பொருட்களை ஏற்றுக்கொள்வதில்லை,அதற்கான அனைத்து காரணங்களையும் தெரிவிப்பார்கள்,ஆனால் நாங்கள் அவர்களிடமிருந்து அனைத்தையும் ஏற்றுக்கொள்வோம் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவிடமிருந்து அதிக இலாபம் உழைப்பதற்காகவே ஐரோப்பிய ஒன்றியம் உருவாக்கப்பட்டது,அவர்கள் அதனை சாதித்துள்ளனர்,ஆனால் தற்போது நான் ஜனாதிபதி என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்