Bondy : Lidl விற்பனையகம் மூடப்பட்டது!!

27 மாசி 2025 வியாழன் 14:00 | பார்வைகள் : 4519
தமிழர்கள் செறிந்து வாழும் Bondy நகரில் உள்ள Lidl விற்பனையகம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது. அப்பகுதியில் மிகவும் வரவேற்பை பெற்ற குறைந்த விலைக் கடை மூடப்பட்டுள்ளமை அப்பகுதி மக்களிடையே பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த பெப்ரவரி 18 ஆம் திகதி முதல் கடை மூடப்பட்டுள்ளமையும், கடையின் வாகனத்தரிப்பிடத்தில் கொங்கிரீட் கற்கள் வைத்து முடக்கப்பட்டுள்ளமையும் அவதானிக்க முடிகிறது.
குறித்த கடையின் ஊழியர்கள் அடிக்கடி தாக்குதலுக்கு இலக்காவதாகவும், பாதுகாப்பு காரணங்களுக்காக அது மூடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
‘மறு அறிவித்தல் வரை’ கடை மூடப்படுவதாக Lidl நிறுவனம் அறிவித்துள்ளது.