டொரொண்டோவில் மீண்டும் பனிப்பொழிவு
 
                    27 மாசி 2025 வியாழன் 04:49 | பார்வைகள் : 3756
வாரத்தின் தொடக்கத்தில் வெப்பமான காலநிலையை எதிர்கொண்ட டொரொண்டோ, நாளை முதல் மீண்டும் பனிப்பொழிவும் உறைபனித் தரையும் எதிர்கொள்ளக்கூடும் என கனடா சுற்றுச்சூழல் திணைக்களம் அறிவித்துள்ளது.
புதன்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 3 பாகை செல்சியசாக இருக்கும்.
ஆனால், இரவு 0 பாகை செல்சியதாக வரை குறையும். மாலை நேரத்தில் 2 – 4 சென்றி மீற்ர் வரை பனிப்பொழிவு ஏற்படும் வாய்ப்புள்ளது.
இது, இந்த மாதம் ஆரம்பத்தில் தொடர்ந்து ஏற்பட்ட பனிப் புயல்களில் 50 சென்றிமீற்றருக்கும் அதிகமான பனி வீழ்ந்ததன் பின்னர், நகரம் காணும் முதல் பனிப்பொழிவு என்பது குறிப்பிடத்தக்கது.
வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மேகமூட்டம் நிலவும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
வியாழக்கிழமை 40% மழை அல்லது பனித்துளிகள் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாகவும், வெள்ளிக்கிழமை 60% பனிப்பொழிவு அல்லது மழை பெய்யும் சாத்தியம் உண்டு எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி
        சாலை குறியீட்டு வகுப்பு மற்றும் வாகன பயிற்சி         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan