பயங்கரவாதிக்கு ஆயுள்கால சிறைத்தண்டனை.. பிரான்சில் அரிதான நிகழ்வு!!
 
                    26 மாசி 2025 புதன் 19:18 | பார்வைகள் : 6666
நீஸ் நகர தேவாலயம் ஒன்றில் தாக்குதல் மேற்கொண்டிருந்த பயங்கரவாதி ஒருவருக்கு ஆயுள் கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
நீஸ் நகரின் basilique de Nice தேவாலயத்தில் Brahim Aouissaoui எனும் பயங்கரவாதி 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் 29 ஆம் திகதி தாக்குதல் ஒன்றை மேற்கொண்டிருந்தார். மூவர் அதில் உயிரிழந்திருந்தனர். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கைது செய்யப்பட்ட குறித்த பயங்கரவாதிக்கு இன்று பெப்ரவரி 26, நீஸ் நகர நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

‘குறைக்க முடியாத மற்றும் பரோல் இல்லாத ஆயுள்கால கடுங்காவல் சிறைத்தண்டனை’ விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
பரோல் வழங்கப்படாத ஆயுள்கால சிறைத்தண்டனை பிரான்சில் வழங்கப்படுவது மிகவும் அரிதான நிகழ்வாகும். முன்னதாக இதேபோன்ற ஒரு சிறைத்தண்டனை நவம்பர் 13 தாக்குதலில் (2015) ஈடுபட்டிருந்த சாலா அப்தெல்சலாமுக்கு பரிஸ் நீதிமன்றத்தால் வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று






 ALARME 24 மணி நேர பாதுகாப்பு
        ALARME 24 மணி நேர பாதுகாப்பு         
     


 
        
        .jpeg) 
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan