ஜன்னலுக்கால் தூக்கி வீசப்பட்ட குழந்தை பலி.. இளம் பெண் கைது!!

24 மாசி 2025 திங்கள் 17:50 | பார்வைகள் : 9893
விடுதி ஒன்றின் இரண்டாவது தளத்தில் இருந்து புதிதாக பிறந்த குழந்தை ஒன்றை தூக்கி வீசிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
17 வயதுடைய அமெரிக்கப் பெண் ஒருவரே பெப்ரவரி 24, திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். அவர் பரிஸ் 20 ஆம் வட்டாரத்தில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த நிலையில், இன்று காலை அவர் புதிதாக பிறந்த கைக்குழந்தை ஒன்றை ஜன்னல் வழியாக தூக்கி வீசியுள்ளார். இதில் குழந்தை பலியாகியுள்ளது.
பின்னர் காவல்துறையினர் அப்பெண்ணைக் கைது செய்தனர். அவர் குழந்தை பிறப்பை ரகசியமாக வைத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.
1 நாள் முன்னர்
மரண அறிவித்தல்

மேரி பிறக்சிற்றம்மா
புதுக்கோட்டை (இந்தியா), யாழ்/நெடுந்தீவு
வயது : 80
இறப்பு : 26 Sep 2025
-
1